KVP Productions
Saturday, June 11, 2016
Friday, November 27, 2015
Thursday, October 22, 2015
KVP Productions

உலகமெங்கும் இளம் தயாரிப்பாளர்கள், திரைக்கதை வல்லுனர்கள், அறிமுக இயக்குனர்கள் என அனைவராலும் புதிய புதிய குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப் பட்டவண்ணம் இருக்கின்றன. இது
இவ்வாறிருக்கையில் நாமும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை இவ்வுலகிற்கு தெளிவுபடுத்த
மிகவும் வயதில் சிறிய, பள்ளிக் கல்வியை முடித்து தற்போது பரீட்சை பெறுபேறுகளை
எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 19 வயதை பூர்த்தியாக்கிய இளம் சமுகத்தினர்
சிறந்த ஒரு திரைக்கதையை தயாரித்து அதனை குறும்படமாக உருவாக்கவுள்ளனர்.
எவருமே
நினைத்துப்பார்க்க முடியாதவளவிற்கு
இவ்விளம் சமுதாயத்தினர் இத்துறையிலே ஆர்வத்துடிப்போடு செயலாற்றி
வருகின்றனர். அந்தவகையில் சிறந்த அறக்கருத்துக்களை மையப்படுத்தி, தற்கால தமிழ்
சமுகத்தினரிடையே விழிப்புணர்வையும், கருணை, பொதுநலம் போன்ற மானிட உணர்வுகளையும் ஏற்படுத்தத்தக்கவகையில், குறிப்பாக பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்றவகையில் திரைக்கதை
உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது.
மேலும்
எமது சமுகத்தினர் தம்மை அறியாமல் செய்யும் தவறுகளும் இக்கதையில் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இக்குறும்படத்தினுடைய தலைப்பு விவாதம் தொடர்ந்து நடைபெற்றவண்ணம் இருக்கின்றது. மிக
விரைவில் திரைக்கதைக்கு ஏற்றவறான தலைப்பு இடப்படுமென படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
குறும்படத்தின்
ஆரம்பகட்ட படப்பிடிப்பு வேலைகள் யாவும் இறைவன் திருவருளால் எந்தவித தடையுமின்றி
மிகச்சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மிகவிரைவில் அனைவரது கண்களுக்கும், இரசனைகளுக்கும்
இதமளிக்கக் கூடியவகையில் இக்குறும்படம் வெளியிடப்படும் என்பதனை தெரிவிப்பதில் KVP Productions பெருமையடைகின்றது.
Subscribe to:
Posts (Atom)